|
ரயில் நிலையம் மற்றும் அதன் நிலத்தடி பாதைகள் & அங்காடிகள் வரைபடம் |
|
Y-Mall இருந்து விமான நிலையத்திற்கான நுழைவு வாயில் |
தைபே ரயில் நிலையம் என்பது நம்மூர் சென்னை சென்ட்ரல் ஸ்டேசன் மாதிரி மிகப்பெரிய ரயில் நிலையம். இந்த ரயில் நிலையம் பயன்பாட்டிற்கு வந்து ஒரு நூற்றாண்டு ஆகிறது. ஆம் 1918 ஆம் ஆண்டு தான் முதன் முதலில் திறந்திருக்கிறார்கள்.
தைவான்
முழுவதும் செல்லக்கூடிய எல்லா புற ரயில்களும் இந்த நிலையத்தில் இருந்து புறப்பட்டோ அல்லது இந்த நிலையத்தை தொட்டோ தான் செல்லும்.
அது
போல் தைபேக்குள் இயங்க கூடிய மெட்ரோ ரயில்களின் இரண்டு பாதைகள்
(
ரெட்,
புளு)
இந்த நிலையத்தை தொட்டே சொல்லும்.
ஒவ்வொரு பாதையிலும் இரண்டு நிமிடங்களுக்கு ஒரு ரயில் என்ற விகிதத்தில் மெட்ரோ ரயில்கள்
செல்லும்.
சமீபத்தில் இந்த ரயில் நிலையத்தில் இருந்து தவ்யான்
பன்னாட்டு விமான நிலையத்திற்கு என்று தனி மெட்ரோ ரயில் விடப்பட்டது. மொத்த தூரம் 51 கிலோ மீட்டர்.
சுமார் 40
நிமிடங்கள் பயணத்தில் விமான நிலையத்திற்கு சென்றுவிடலாம்.
அது போல் தெற்கு தைவானின் கெள
ஷியாங் நகரத்திற்கு அதிவிரைவு ரயில் கூட செல்கிறது.
இந்த ரயிலானது 270
முதல் 300
கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது.
அத்தனை ரயில்களை இயங்கக்கூடிய இந்த
ரயில் நிலையம் எந்த அளவுக்கு பரபரப்பாக இயங்கும் என்று நினைத்துப் பாருங்கள்.
Y3 வாசல் அருகே ஒரு மேடையிருக்கும்.
அதில் யாராவது ஒருவர் இசைத்துக்கொண்டிருப்பார்.
விதவிதமான கருவிகளை இசைக்கும் வித்தகர்கள் அங்கு இசைப்பார்கள்.
அவர்களுக்கு முன்னர் ஒரு சிறிய பெட்டியிருக்கும்.
அவர்களுடைய இசை நமக்கு பிடித்திருந்தால் பணத்தை அதற்குள் போடலாம்.
அந்த இசையை ரசிக்கும் மனநிலை இல்லை என்றாலும் தாராளமாக
பணம் போடலாம். நேற்றைய தினம் ஒரு வயதான இசைக் கலைஞர் யாழ் போன்ற இசைக்கருவியை இசைத்துக்கொண்டிருந்தார். ஒரு முறை இசைத்ததும் சிறிது ஓய்வெடுக்க செல்லும் போது அவரால் நடக்க முடியாது என்பதை அறிந்தேன்.
"இசைக்கு வயதேது, உடல் ஏது"
No comments:
Post a Comment