அடுத்த
நாள் காலை 6 மணிக்கு எழுந்து
பக்கத்தில் இருக்கும் பகோடாவை சுற்றிப்பார்த்தேன். முதல்
பாகத்தில் சொன்னது போல் இது
ஒரு செயற்கை குன்று. நான்கு
பக்கமும் மேலே செல்வதற்கு பாதை
இருக்கிறது. எந்த பக்கம் முன்
வாசல் என்று தெரியவில்லை. சிறிய
சங்கிலி கொண்டு சுற்றி பாதுகாப்பு
செய்திருக்கிறார்கள். ஒரு பக்கம் சிலர்
தள்ளுவண்டியில் வியாபாரம் செய்வதற்கு ஆயத்தம் செய்துகொண்டிருந்தார்கள். அவர்களை தாண்டி
கொஞ்ச தூரம் சென்றதும் படிக்கட்டு
தெரிந்தது. படிக்கட்டின் முகப்பில் ஏழு தலையை விரித்துக்கொண்டு
இரண்டு பக்கமும் நாகத்தின் சிலை இருந்தது. இதனை
வாசுகி என்கிறார்கள். அது போல் சில
இடங்களில் ஆதிசேஷன் என்கிறார்கள். கம்போடியாவில் நிறைய இடங்களில் வளாகங்களை சுற்றிலும்
இதேபோன்ற பாம்பு சிலைகளை காவல் தெய்வமாக வைத்திருக்கிறார்கள். ஒரு
சில புகைப்படம் எடுத்ததும் மேலே செல்வதற்கு முதல்
படியில் காலை வைத்தேன். யாரோ
கூப்பிடுவது போன்று இருந்தது. பகோடாவின்
பாதுகாவலர் ஒருவர் எங்கிருந்தோ என்னை
நோக்கிவந்து ஒரு டாலர் பணம்
கேட்டார்.
வாட்நாம் |
முந்தைய
நாள் கேள்விபட்டதில் கோவில் கூட 8 மணிக்கு
திறந்து 5 மணிக்கு மூடிவிடுவார்கள் என்பது
தான். ஒரு மூடிய கோவிலை
போய் பார்ப்பதற்கு 1 டாலர் பணம் கேட்டார்.
எனக்கு முன்னர் உள்ளூர் தம்பதி
ஒன்று மேலே ஏறிசென்றனர். அவர்களிடன்
எதுவும் கேட்கவில்லை. கிட்டதட்ட நான் மேலே ஏறுவதற்கு
காத்திருந்து வந்தது போன்று இருந்தது.
ஒரு டாலர் பணம் கொடுத்துவிட்டு
மேலே சென்றேன்.
மேலே ஏறியதும் கண்களில் முதலில் தட்டுப்பட்டது கொடி
மரம். நம் ஊரில் கோவில்களில்
இருப்பது போன்ற கொடிமரம், அதன்
மீது சேவல் போன்ற ஒரு
உலோக அமைப்பு இருந்தது. மஞ்சள்
நிற கொடி ஒன்று தொங்கி கொண்டிருன்டிருந்தது.
கோவில் சிமெண்டால் கட்டியது போன்று இருந்தது. எங்கு
பார்த்தாலும் சிவப்பு, மஞ்சல் நிறமாக இருந்ததால்
அனுமானிக்க முடியவில்லை. கூரையானது ஓடு வேய்ந்தது. சுவற்றில்
உருவம் செய்து கூரையை தாங்கி
பிடிப்பது போன்று வடிவமைத்திருந்தார்கள். நம் ஊரில்
யட்சிகளும் அரக்கர்களும் இரு கை கொண்டு
எதையாவது தாங்கு வது போன்று
ஒரு அமைப்பு.
கொடிமரத்துக்கு
பக்கத்திலே ஒரு சிறிய ஓட்டு
கூரைக்குள் மிகப்பெரிய மேளம் வைத்திருக்கிறார்கள். சீன, தைவான்
நாடுகளில் இப்படி பட்ட பெரிய
மேளங்களை வைத்து அதனை அடிப்பதற்காக
சங்கிலியில் ஒரு கட்டையை கட்டி
தொங்க விட்டிருப்பார்கள்.
அந்த சங்கிலியை இழுத்து விட்டால் கட்டை
போய் மேளத்தின் தோல்பரப்பை அடித்துவிட்டு வரும். ஆனால் இங்கு
அது போன்ற எந்த அமைப்பும் இல்லை.
ஒருவர்
சிறிய பறவைகள் நிரம்பிய கூண்டை
எடுத்து மேலே வந்தார். அதனை
பறக்க விடுகிறேன், படம் எடுக்கிறாயா என்றார்.
வேண்டாம் என்று கோவிலின் பின்புறம்
சென்றேன். வெள்ளை நிறமான வானுயர்ந்த
பகோடா ஒன்று கோவிலுக்கு பின்புறம் இருந்தது. அது ஒரு உள்ளீடற்ற
கோபுரம். அதாவது அதனுல் செல்வதற்கு
எந்த பாதையும் கிடையாது. ம்ற்றிலும் சிமெண்ட் கலவையை ஊற்றி செய்ததாக
இருக்கலாம். எந்த வித வர்ணமும்
பூசாமல் சிமெண்ட் நிறத்திலே வைத்திருக்கிறார்கள். அப்படியே சுற்றி முன்புறம் வரவும்
ஒரு பெரியவர் கோவில் கதவை திறக்கவும்
சரியாக இருந்தது. என்னை உள்ளே வா
என்று அழைத்தார். பெரிய அரங்கம் அதில்
படுத்த வண்ணம் இரண்டு சிலைகளும்
உட்கார்ந்தபடி இரு சிலைகளூம் இருந்தன.
இந்த நான்குசிலைகளும் தான் 'பென்' பாட்டி
கண்டெடுத்தவைகளாக இருக்க வேண்டும். பெரிய
பெரிய மெழுகுவர்தியை ஏற்றி வைத்திருந்தார்கள். உள்சுவற்றில்
சுவரோவியம் நிறைய இருந்தது. அதில்
அந்த கால தண்டனை முறைகள்
நிறைய இருந்தன. நம் ஊரில் சூடம்
ஏற்றுவது போல் இங்கு எல்லாம்
ஊதுவத்தி கொளுத்துவது வழக்கம். ஒரு ஊதுவத்தி கொளுத்தி
வைத்துவிட்டு ஹோட்டலுக்கு திரும்பினேன்.
மெழுகுவர்த்தி |
கம்போடியாவில்
மிகவும் ஆச்சரியப்பட்ட விசயம் மிகப்பெரிய சாலையில்
கூட போக்குபோக்குவரத்து சிக்னல் விளக்குகள் இல்லை.
மோட்டார் வாகனமாகட்டும், டுக் டுக் ஆகட்டும்
அல்லது மகிழுந்தாகட்டம் ஒரு வித நளினத்துடன்
வளைந்து நெளிந்து சாலைகளை கடந்து, அல்லது
அடுத்த சாலைக்குள் செல்கிறார்கள். எவரும் அடுதவர் வண்டி
தாண்டிசெல்வதற்காக நிறுத்துவதில்லை. ஒலி எழுப்புவதில்லை. அதற்கு
மிகமுக்கிய காரணம் வண்டியின் வேகம்
தான் என்று நினைக்கிறேன். 30 லிருந்து
40 கிமீ வேகத்திலே அனைத்து வாகனங்களும் செல்கின்றன.
அதனால் அவர்களுக்கு அடுத்த வாகணத்தின் வேகம்
திசை எல்லாம் ரொம்பவும் எளிமையாக
கணிக்க முடிகிறது என்று நினைக்கிறேன்.
இரவு 9 மணி அளவில்
மேக்காங் ஆற்றின் கரையோரம் ஒரு
நடைபயனம் போய்விட்டு வரலாம் என்று நானும்
இளங்கோவும் சென்றோம். இளங்கோ எங்களுடைய வியட்நாம்
அலுவலகத்தில் இருந்து வந்திருந்தார். ஹோட்டலை
விட்டு வெளியே வந்து வாட்நாமை
சுற்றி நடந்தோம். சிறிது தூரம் நடந்ததும்
"ஸ்லீப் வித் யூ" என்று
ஒரு வரி காதில் விழுந்தது.
திரும்பி பார்த்தால் இரண்டு பெண்கள் நின்று
கொண்டிருந்தார்கள். பதில் பேசாமல் நடந்தோம். இளங்கோ கொஞ்சம் முன்னாடி
போனதும் கெக்கே பிக்கே என்று
சிரித்தார். அவரிடம் சிரிக்காதீர்கள், நம்
சிரிப்பு சத்தம் அவர்கள் காதில்
விழுந்தால் பிரச்சனையாகிவிடும் என்று சொன்னேன். அவர்
அதனை காதில் வாங்கியது போல்
தெரியவில்லை. மேக்காங்க் ஆற்றின் கரையோரம் பெரிய
நடைபாதை கட்டிவைத்திருக்கிறார்கள். நடைபாதைக்கு ஒரு பக்கம் மேக்காங்
ஆறு ஓடுகிறது. அடுத்த பக்கம் இரவு
கேளிக்கை விடுதிகள் மற்றும் உணவு விடுதிகள்
இருக்கின்றன. சிறிது தள்ளி அரண்மனை
உள்ளது. ஆனாலும் வழி நெடுகிலும்
பெண்கள் நின்று கொண்டு தான்
இருக்கிறார்கள். திரும்பி வரும் பொழுது பாதை
மாறி இரவு கேளிக்கை விடுதிகள்
இருக்கும் தெருவழியாக வந்தோம். மேற்குலக மக்கள்
நிறைய பேர் இருக்கிறார்கள். கேளிக்கை
விடுதிகள் அனைத்தும் அவர்களால் நிறைந்து வழிகின்றது. மேலும் தெருவிலே பந்தல்
போட்டு சேர் மற்றும் மைக்
செட் வைத்து மதுபானம் அருந்திக்கொண்டிருக்கிறார்கள்.
அங்கேயும் மேற்குலக மக்களே அதிகம் இருக்கிறார்கள்.
இத்தனைக்கும் 'நாம் பென்' சுற்றுலா
தளம் கூட கிடையாது. அங்கு
அதிக பட்சம் சுற்றுலா தளமாக அரண்மனை, வாட்நம், மியூசியம், ஒரு கொலைக்களம் அவ்வளவுதான்.
அடுத்தநாள்
சீதாவிடம் இங்கு தொழிலாலர்களூக்கு சம்பளம்
எவ்வளவு என்று கேட்டேன். குறைந்தபட்சம்
நூறு அதிகபட்சம் நூற்றைம்பது அமெரிக்க டாலர் என்றார். ஒரு
மாதத்திற்கு சொல்லுங்கள் என்றேன். அவர் நானும் ஒரு
மாதத்திற்கான சம்பளம் தான் சொல்கிறேன்.
இங்கு தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒரு
நபருக்கு குறைந்த பட்சம் 100 அதிக
பட்சம் 150 டாலர் தான் சம்பளம்
என்றார். கடைசி நாள் ஒரு
இந்திய உணவகத்துக்கு நேரில் சென்றேன். அவரும் 100 முதல்
125 டாலர் தான் சம்பளம் என்றார்.
இந்த ஊரில் அனைத்து விலைகளுமே
டாலரில் தான் சொல்கிறார்கள்.
சில ஆசிய நாடுகள் போன்று
இங்கும் வெளியே உணவு உண்ணும்
முறை அதிகமாக தெரிகிறது. நூறு
டாலர் எப்படி ஒருவருக்கு போதுமானதாக
இருக்கும். மீதி தேவைகளுக்கு என்ன
செய்வார்கள். வருமையின்
காரணமாகவே பெண்கள் இரவு நேரத்தில் இப்படி வரிசையில் நிற்கிறார்கள் போலும் என்று நினைத்துக்கொண்டேன்..
மேலும்
இங்கு ராபெரி கூட அதிகமாக
இருக்கும் போல் தெரிகிறது. ஆங்கர்
வாட் செல்லும் போது விமான நிலையம்
செல்ல டுக் டுக் வாடகைக்கு
எடுத்தேன். வண்டியில் ஏறியதும் முதுகு பையையும் என்னுடைய
கேமரா பையையும் கழட்டி வண்டியில் வைத்தேன்.
வண்டியோட்டி என்னிடம் வந்து பையை திரும்ப
மாட்டிக்கொள்ள சொன்னான். மேலும் கேமரா பையை
கையில் கட்டியாக பிடித்துக்கொள் அல்லது யாராவது எடுத்துவிடுவார்கள்
என்றான். அப்படி என்றால் ஓடுகின்ற
வண்டியிலிருந்தே திருடும் வழக்கம் அங்கும் உள்ளது
என்று தான் நினைக்கிறேன். இதற்கு
கூட அவர்களுடைய குறைந்த வருமானமே காரணமாக இருக்கலாம். ஆனால் 'நாம்பென்'னை
விட ஆங்கர் வாட் அதிக
பாதுகாப்பாக இருக்கும் என்று சீதா சொன்னார்.
அவர்களுடைய மிகப்பெரிய சுற்றுலா தளம் ஆங்கர் வாட்
என்பதனால் கூட அது பாதுகாப்பானதாக
இருக்கலாம்.