எர்னெஸ்ட் ஹெமிங்வே
எழுதிய "The old man and the Sea” என்ற நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு “கடலும் கிழவனும்”.
சிறிது நாட்களுக்கு
முன்னர் ஒரு இருபது பக்கம்
வாசித்தேன். கதையில் அப்படி ஒன்றும்
ஈர்ப்பு இருப்பதாக தெரியவில்லை. தமிழ் கதைகள் போல்
இல்லாமல வாசிக்கும் போதே மொழி பெயர்ப்பு
நூல் என்பதை சொல்லாமல் சொல்லியது.
அதனால் மூடிவைத்துவிட்டு வேறு வேலை பார்க்க
போய்விட்டேன்.
இன்று எதேச்சையாக கண்களில்
மீண்டும் தட்டுப்பட்டது. சரி முயற்சித்து பார்க்கலாம்
என்று மீண்டும் விட்ட இடத்தில் இருந்து
ஆரம்பித்தேன். அடுத்து ஒரு பத்து
பக்கங்கள் தாண்டியதும்
கதை அப்படியே உள்ளே இழுத்துவிட்டது. வேறு
வேலை எதுவும் செய்ய தூண்டாமல்
ஒரே மூச்சில் வாசிக்க தூண்டியது.
ஒரு கிழ மீனவன் இருக்கிறான். அந்த வயதிலும் கட்டுமரத்தில் போய் மீன்பிடிக்கிறான். சிறுவன் ஒருவன் சிறிதுநாட்கள் துனைக்கு இருக்கிறான். கிழவனும் சிறுவனும் ஒன்றாக மீன் பிடிக்க செல்கிறார்கள். கிழவனோ அதிர்ஷ்டக்கட்டை. சிறுவனின் பெற்றோர்கள் அவனை வேறு படகில் மீன்பிடிக்க சொல்கிறார்கள். அவனும் வேறு வழியில்லாமல் வேறு படகுக்கு சென்றாலும் அவ்வப்போது வந்து கிழவனை கவனித்துக்கொள்கிறான். கிழவனுக்கு மீன்கிடைத்து அன்றோடு எண்பத்தி நான்கு நாட்கள் ஆகின்றது.
எண்பத்தைந்தாம் நாள் கருக்கலிலே எழுந்து சிறுவனோடு கடற்கரைக்கு
வரும் கிழவன் எப்படியும் இன்று
பெரிய மீனை பிடித்துவருவேன் என்று
கடலுக்குள் தனியாக செல்கிறான். ஆழ்கடலுக்கு
சென்று தூண்டிலை போட்டு காத்திருக்கிறான். மதியத்திற்கு மேல் சுமார் 120 ஆள் ஆழத்துக்குள் போட்ட தூண்டில் லேசாக அசைகிறது. மீனோ இரையை கடிப்பதும் விடுவதுமாக இரண்டு மூன்று முறை போக்கு காட்டுகின்றது. அது முழுவதுமாக இரையை விழுங்க காத்திருக்கிறான்.
அது முழு இரையை விழுங்கி தூண்டிலில் மாட்டியதும் தான் புரிகிறது தான் எப்பேர் பட்ட
ஆபத்தில் இருக்கிறோம் என்று. கிழவனுக்கும் அந்த மீனுக்கும் இடையில் நடக்கும் உயிர்
போராட்டம் கதையாக விரிந்து நம்மையும் அப்படியே கட்டிப்போடுகின்றது.
மேலே சொன்ன கதை சுருக்கம்
முதல் 30 பக்கத்துக்குறியது, மொத்தம் 130 பக்கம். மீதியை வாய்ப்பிருப்போர்
புத்தகத்தில் படித்துவிடுங்கள். முடிவை வெண்திரையில், மன்னிக்கவும் புத்தகத்தை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
1954 ஆம் வருடம் நோபல் பரிசு பெற்ற நாவல்.
No comments:
Post a Comment