முதல் பாகம் படிக்காதவர்களுக்கு தமிழும் சித்தமருத்துவமும் (பாகம் 1)
மூலிகையின் பெயர்கள்:
நம் முன்னோர்கள் ஒரு மூலிகைக்கு பெயரை சூட்டும்பொழுதே அதற்கான காரண காரியங்களை சரியாக ஆராய்ந்தே பெயர் கொடுத்திருக்கின்றார்கள்.
சங்குபூ என்றொரு மூலிகை செடி. இதன் பூவானது பார்ப்பதற்கு சங்கு வடிவில் இருக்கும். இந்த மூலிகையானது நம்முடைய கழுத்தில் உள்ள சங்கோடு தொடர்புடையது. மனித உடலின் சங்கு என்று குறிப்பிடப்படுகின்ற இடத்தில் வரும் அனைத்து நோயகளுக்கும் இந்த மூலிகையை தனியாகவோ, பிற மூலிகையுடன் சேர்த்தோ கொடுத்தால் குணமாகிவிடும்.
கண்டங்கத்திரி - இதை பிரித்து பாருங்கள். கண்டம் + கத்திரி. கண்டம் என்பது மனிதனின் தொண்டையை குறிக்கின்ற ஒரு வார்த்தை. தொண்டையில் ஏற்படக்கூடிய சதை வளர்ச்சிக்கு(டான்சில்) கண்டம் கத்தரியை மருந்தாக கொடுத்தால், சதை வளர்சியானது கரைந்துவிடும். கத்தரி வைக்க வேண்டிய அவசியமே இல்லை.
உத்தா மணி - இது வேலிபருத்திக்கான பரிபாசை பெயர். உத்து என்றால் தூண்டுதல் என்று ஒரு அர்த்தம் இருக்கின்றது. உத்தா என்றால் தூண்டாத என்று அர்த்தம். ஒரு வியாதி இருக்கின்றது. அது இதற்கு மேல் பரவாமல் கட்டு படுத்தவேண்டும் என்றால் உத்தா மணியின் இலை, வேர், தண்டு ஏதாவது ஒன்றை எடுத்து மருந்து தயாரித்து கொடுத்துவிட்டால் அந்த வியாதியின் வீரியமானது ஒரு கட்டுக்குள் நிற்கும். எப்பேர்பட்ட வியாதியையும் ஒரு கட்டுக்குள் கொண்டுவரும், புற்றுநோய் (கேன்ஸர்) உட்பட.
தும்பை - துன்பத்தை போக்குவது தும்பை. நோய் என்றாலே துன்பம் தான். தும்பை பூ, இலை, வேர் இதில் ஏதாவது ஒன்றை மருந்தாக சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு குறைபாடு மற்றும் சளித்தொலை குணமாகின்றது.
அகத்தி கீரை - பிரித்து எழுதினால் அகம் + தீ + கீரை. இதனை சாப்பிட்டால் நம் உடலின் உள் வெப்பமானது சமநிலைப்படும். அகத்திகீரை சமைத்த தண்ணிரை கொடுத்தால் உச்சி வூடு என்று சொல்லக்கூடிய ஜன்னியானது குணமாகும்.
முருங்கை கீரை - உடலுக்கு முறுக்கை கொடுக்ககூடியது முருங்கை. இதன் மற்ற பயன்கள் ஏற்கெனவே உங்களுக்கு தெரியும். அதனை பற்றி இங்கு அதிகமாக சொல்லவேண்டியது இல்லை.
மாதுளை - பிரித்து எழுதினால் மா + துளை. இங்கு துளை என்பது புண் என்ற அர்த்தத்தில் வரும். மா என்றால் பெரியது. எப்பேர்பட்ட வயிற்று புண்ணையும் குணமாக்கக் கூடிய சக்தி இந்த மாதுளைக்கு இருக்கின்றது.
வல்லாரை - ஆரை என்ற கீரையை சாப்பிட்டால் உடல் வலிமை பெருகின்றது என்று கண்டு பிடித்தார்கள். அதனால் தான் அதன் பெயர் வல்லாரை.
நீர் ஆரை என்ற ஒன்று இருக்கின்றது. இதனை சாப்பிட்டால் உடலின் நீர் சம்பந்த பட்ட பிரச்சனைகள் தீரும்.
இப்படி ஒவ்வொரு மூலிகைக்கும் பெயர் வைக்கும் பொழுதும் அதற்கான காரண காரியங்களை ஆராய்ந்தே வைத்திருக்கின்றார்கள். இந்த பெருமை தமிழ் மொழிக்கே உரியதான ஒன்று.
நோய்களின் பெயர்கள்:
அது மட்டும் அல்ல. வியாதிகளுக்கு கூட வேறு வேறு தமிழ் பரிபாசை பெயர்கள் இருக்கின்றது.குன்மம் என்றால் நமக்கு என்ன என்று தெரியாது. ஆனால் குடல் புண் என்றால் அல்சர் என்று உடனே சொல்லிவிடுவோம். ஆம், குட்ற்புண்ணின் பரிபாசை பெயர்தான் குன்மம். சித்த மருத்துவத்தில் 21 வகையான குன்மம் பற்றி சொல்லப்படிருக்கின்றது. அதுவும் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே.
கேன்சர் என்றால் புற்று நோய் என்று நம் எல்லோருக்கும் தெரிந்தது. புற்று நோய் என்று தேடினால் சித்தர் பாடல்களில் உங்களுக்கு எதுவும் கிடைக்காது. அப்படி என்றால் நம் சித்த மருத்துவத்தில் புற்று நோய்க்கு மருந்து சொல்லவே இல்லையா என்ற கேள்வி வரும். சித்த மருத்துவத்தில் இதற்கு இன்னொரு பெயர் இருக்கின்றது. புற்று நோயின் பரிபாசை பெயர் வெட்புறுதி.
டி.பி - சயரோகம் என்று போதுவக சொல்லப்படும் ஒரு நோய். இதனை சுவாச காசம் என்று குறிப்பிடிருப்பார்கள்.
இப்படி எல்லா நோய்களுக்கும் வேறு வேறு தமிழ் பரிபாசை பெயர்கள் இருக்கின்றது. அதனை தெரிந்து கொள்ளாமல் சித்த மருத்துவத்தில் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது.
முடிவுரை:
தமிழ் மருத்துவமாம் சித்த மருத்துவத்தை நினைத்து பெருமை கொள்ளக்கூடிய சில விசயங்கள் இருக்கின்றன்.
1. ஒரு மூலிகையின் பெயரைக்கொண்டே அது இன்ன நோய்க்கு கொடுக்கலாம் என்ற சிறப்பு சித்த மருத்துவத்துக்கு மட்டுமே இருக்கின்றது.
2. டெங்கு காய்ச்சல் - அலோபதியில் இதற்கு தற்பொழுது மருந்து இல்லை என்று கூறிவிட்டார்கள். இதற்கான மருந்து நில வேம்பு போட்ட குடிதண்ணிரும், பப்பாளி இலை சாரும். இந்த மருந்தை தொடர்ந்து உட்கொண்டு வர டெங்கு காச்சல் முழுவதும் குணமடையும். இதனை தமிழக அரசே அங்கிகரித்து தொலைக்காட்சி வாயிலாக அறிவித்து வருகின்றது.
3. இதுவரைக்கும் உலகத்தில் வந்திருக்கின்ற, இனிமேல் வரப்போகின்ற நோய்களுக்கு எல்லாம் மருத்துவம் சொல்லிவைத்திருக்கின்ற ஒரே மருத்துவம் சித்த மருத்துவமே. நம்முடைய சித்தர்கள் மனிதர் மற்றும் விலங்குகளுக்கான மருந்துகளாக மொத்தம் 4448 நோய்களுக்கு மருத்துவம் சொல்லி வைத்திருக்கின்றார்கள்.
இத்தகைய சித்த மருத்துவம் நம் தமிழ் மருத்துவம் என்று கூறிகொள்வதில் பெருமை கொள்வோம்.
No comments:
Post a Comment