எல்லோருக்குமே நிறைய அனுபவங்கள் இருக்கும். நிறைய மனிதர்களை சந்தித்திருப்பார்கள். ஆனால் காலப்போக்கில் அந்த அனுபவங்களையோ அல்லது நாம் சந்தித்த மனிதர்களையோ மறந்து விடுவோம். சில அனுபவங்கள் மறக்கப்படுவதே சிறந்தது. சில அனுபவங்கள் நினைத்து பார்க்கும்பொழுதே நம்முள் ஒரு மகிழ்ச்சியை அல்லது நெகிழ்ச்சியை கொடுக்கும். சில அனுபவங்கள் நமக்கு நல்ல ஒரு பாடத்தை கற்றுகொடுத்திருக்கும். அப்படிபட்ட சிலவற்றை காண்டா விளக்கு என்ற தலைப்பில் இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.
2006 ஆம் ஆண்டில் இதே அலுவலகத்தின் சென்னை கிளையில் வேலை பார்த்து கொண்டிருந்தேன். அப்பொழுது சில உதவிகளுக்காக ஆண்டின் தொடக்கத்திலும் மத்தியிலும் தைவான் வந்து சென்றேன். ஒருநாள் என்னுடைய துறை தலைவர், உன்னை மறுபடியும் தைவானுக்கு ஒரு வாரம் கூப்பிடுகின்றார்கள். அதுவும் இன்றே அனுப்ப முடியுமா என்று கேட்கின்றார்கள் என்று சொன்னார். அப்பொழுது என்னிடம் பல்நுழைவு கடவு சீட்டு இருந்ததால் எப்போ சொல்கின்றீர்களோ அப்பொழுது புறப்படுகின்றேன் என்றேன். அவரும் நாளைக்கு இரவு கிளப்புவதற்கு உன்னை தயார் செய்து கொள் என்று கூறினார்.
சென்னை டு சிங்கப்பூர். சிங்கப்பூர் டு தைவான் செல்லவேண்டும். எப்பொழுதுமே சிங்கப்பூரில் 2 மணி நேரத்திலே அடுத்த விமானம் ஏறுவது போன்று பயணச்சீட்டு கொடுப்பார்கள். இந்த முறை அவசரமாக புறப்பட்டதால் காலை சிங்கப்பூர் டு தைவான் விமானத்தில் இருக்கை கிடைக்கவில்லை. மதியம் 12:20 மணிக்கு புறப்படுகின்ற விமானத்தில் தான் இருக்கை கிடைத்தது. அலுவலக நண்பர்கள் நீ வந்து சில வேலைகள் செய்த பின்னர் தான் கிளையண்டின் வெள்ளிகிழமை பேக்எண்டு வேலையை முடிப்பதாக முடிவு செய்திருக்கின்றோம் என்று சொல்லிவிட்டார்கள். சனிகிழமை தைவான் வந்ததும் வேலை முடியும் வரை எனக்கு ஒய்வு எடுக்க கூட நேரம் இருக்காது. அதனால் சிங்கப்பூரில் ஒய்வு எடுக்க ஏதேனும் ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டதற்கு சிங்கப்பூரில் லவுஞ்சில் சென்று கேள் கொடுப்பார்கள் என்று கூறிவிட்டார்கள். நானும் வழக்கம் போல் தலையாட்டிவிட்டு சென்னையிலிருந்த்து விமானம் ஏறி சிங்கப்பூர் வந்தாகிவிட்டது.
சிங்கப்பூரில் லவுஞ்சில் சென்று தங்க இடம் கேட்டாள் அங்கிருந்த பெண்மணி முதலில் உன்னுடைய பயணச்சீட்டை காண்பி என்றார். பயணச்சீட்டை பார்த்ததும் இது எக்கானாமிக் வகுப்பு பயணச்சீட்டு இங்கு அனுமதி கிடையாது என்று கூறி விட்டார். இரவு முழுவதும் விமானத்தில் அரை குறையான தூக்கம். தூக்க சடவு வேறு கண்களை அழுத்த ஆரம்பித்தது. இனி இந்த அம்மிணியிடம் பேசி பயனில்லை என்று லவுஞ்சை விட்டு கீழே வந்தால் நிறைய பயனிகள் சேரில் உட்கார்ந்து மற்றும் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். அதில் காலியாக இருந்த ஒரு இருக்கையில் உடகார்ந்து எதிர்த்தாப்போல் கை பெட்டியை வைத்து அதன் மீது கால்களை தூக்கி வைத்து துங்க ஆரம்பித்தேன்.
ஏதோ ஒரு உள்வுணர்வு என்று தான் சொல்லவேண்டும். திடீரென்று முளிப்பு வந்தது. தலை சேரின் முதுகு தாங்கியின் விளிம்பில் வைத்து வானம் பார்த்து இருந்தது. கண்களை திறந்தால் அருகில் என்னையே பார்த்துக்கொண்டு சுமார் 40 வயது மதிக்க தக்க ஒருவர் நின்று கொண்டிருந்தார். ஒல்லியான தேகம். ஒட்டி இடுக்கிய கன்னங்கள். கொஞ்சமாக குழி விழுந்த கண்கள். வெள்ளை நிறத்தில் வேட்டி சட்டை அணிந்திருந்தார். கைகளில் ஒரு சிறிய கவர். அதில அவருடைய பயணத்துக்கான ஆவணங்கள் இருக்க வேண்டும்.
கண்களை திறந்ததும் என்னைபார்த்து நீங்கள் தமிழா என்று கேட்டார். ஆமாம் என்றதும். நான் விமானம் தவறவிட்டுவிட்டேன் இங்கு என்ன பேசுகின்றார்கள் என்று எனக்கு புரியவில்லை. கொஞ்சம் உதவி செய்யுங்கள் என்று சொன்னார். முதலில் இது ஏதடா வம்பாய் போய்விட்டது என்று மனம் நினைத்தது. யாரு என்னன்னு தெரியாம உதவி செய்ய போய் மாட்டிக்கிட்டா என்ன செய்வது என்றும் நினைப்பில் ஓடியது. இருந்தாலும் என்ன நடந்தது என்று கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள் என்றேன்.
அவர் சொன்னதன் சாராம்சம் இது தான். "நான் புரூனே செல்வதற்காக நேற்று இரவு சென்னையில் விமானம் ஏறினேன். விமானம் முதலில் கொழும்பு சென்றது. அங்கு வேறு ஒரு விமானம் ஏற்றி விட்டார்கள். நான் விமானத்தில் துங்கி விட்டேன். என்னை விமான பணிப்பெண் எழுப்பி நீங்கள் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது இறங்குங்கள் என்று இறக்கிவிட்டு விட்டார்கள். இடம் தெரியாமல் அலைந்ததில் புருனே செல்லும் விமானத்தை விட்டுவிட்டேன். கொஞ்சம் கேட்டு சொல்லுங்கள் என்றார்". மேலும் சில கேள்விகள் கேட்டும் அவருடைய பயனச் சீட்டை வாங்கி பார்த்தும் நான் புரிந்து கொண்டது சென்னை டு கொழும்பு - ஸ்ரீலங்கா விமானம், கொழும்பு டு மலேசியா வழி சிங்கப்பூர் - ஸ்ரீலங்கா விமானம், சிங்கபூர் டு புருனே சிங்கப்பூர் விமானம். அதில் நண்பர்(பெயர் நினைவில் இல்லை அதனால் இனி அவரை நண்பர் என்றே அழைக்கலாம்) நன்றாக தூங்கிவிட்டாதால் சிங்கப்பூரில் இறங்க தாமதமாகிவிட்டது. இறங்கிய பின்னரும் எப்படி அடுத்த கேட் செல்வது என்பதில் எற்பட்ட தாமதம் வேறு. அதனால் விமானம் புறப்பட்ட சிறிது நேரம் கழித்தே கேட்டுக்கு சென்றிருக்கின்றார்.
சரி என்னுடன் வாங்க என்று அவரை அழைத்துக்கொண்டு மாற்றுபதிவு (Transit counter) கவுண்டர் சென்று விசாரித்தேன். அங்கிருந்தவரோ தான் ஏற்கெனவே அவரிடம் எல்லாம் கூறிவிட்டேனே என்று சொன்னார். அவருக்கு ஆங்கிலம் புரியாது. மீண்டும் ஒரு முறை சொல்லுங்கள் என்று சொன்னேன். அடுத்த விமானம் காலை 11:45 மணிக்கு. 11 மணிக்கு இங்கு மீண்டும் வந்தால் ஏதாவது இருக்கை காலியாக இருந்தால் அவருக்கு ஏற்பாடு செய்கின்றேன் என்றார். தேவைபட்டால் பணம் கட்ட வேண்டியது இருக்கும் என்றார். மணியை பார்த்தால் காலை சுமார் 9 மணி 45 நிமிடம் இருக்கும். மீண்டும் முதலில் இருந்த இருக்கை பகுதிக்கே வந்து உட்கார்ந்தோம். நண்பரிடம் 11 மணிக்கு நம்மை வரச்சொல்கின்றார், வேறு விமானம் மாற வேண்டியது இருப்பதால் அதுவும் தவறு உங்கள் மீது இருப்பதால் கூடுதலாக கொஞ்சம் பணம் கட்ட வேண்டும் என்று சொல்கின்றார். எவ்வளவு கட்ட வேண்டும் என்று தெரியவில்லை. பணம் ஏதும் வைத்திருக்கின்றீர்களா என்று கேட்டேன். இதனை வைத்துகொண்டு எப்படியாவது உதவி செய்யுங்கள் என்று அவருடைய வலது கையை விரித்தார். 100 ரூபாய் காந்தி நோட்டு ஒன்று அவர் கைகளில் சுருண்டு இருந்தது.
....தொடரும்....
Where to Bet on Sports To Bet On Sports In Illinois
ReplyDeleteThe best sports bet types 바카라사이트 and bonuses available หารายได้เสริม in Illinois. The most common sports betting options available. Bet $20, Win apr casino $150, Win 토토 사이트 홍보 $100 or ventureberg.com/
While all casinos have a variety of|quite lots of|a wide range of} betting options and participant rewards out there, not all additionally be} a match for your on-line playing wants. Some on-line casinos Korean players can gamble at give you the benefit of|the good thing about|the advantage of} playing with Won but there are additionally those who don’t accept the foreign money. However, all casinos permit you to switch your money directly to USD, EUR, GBP, 메리트카지노 or other international currencies and use it to play your favorite games.
ReplyDelete